Happy New Year Wishes - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புதிய விடியல்
புவியில் மலரட்டும்
விதியைக் கிழித்து
விருட்சம் வளரட்டும்!
நம்பிக்கை எனும்
நந்தவனம் பூக்கட்டும்
அச்சங்கள் யாவும்
அனலாய் வேகட்டும்!
வெற்றிப் பாதையில்
வெற்றி நடை போடுவோம்
சுற்றும் உலகினைச்
சுதந்திரமாய்ச் சூழுவோம்!
தடைகள் தகர்த்து
தனி முத்திரை பதிப்போம்
விடைகள் தேடி
விண்முட்டப் பறப்போம்!

No comments
Thank you for your comments