Breaking News

ஜனநாயகன்' படத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம்: காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா ஆவேசம்!

 

காஞ்சிபுரம், ஜன. 11: 



செயல்வீரர்கள் கூட்டம்:

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில், திராவிட வெற்றிக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் லோ. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தலைவர் மல்லை சத்யா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், 

"வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னையில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

தணிக்கைக்குழு மீது விமர்சனம்:

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா கூறியதாவது:

  • ஜனநாயகன் திரைப்படம்: தணிக்கைக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பாஜக அரசால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் பாஜகவின் விருப்பப்படியே செயல்படுகிறார்கள். இத்திரைப்படம் வெளிவராததால் திரைக்கலைஞர்கள், முதலீட்டாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வரும் இப்படத்தை வெளியிட அனுமதி கோரியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • சல்லியர்கள் திரைப்படம்: 'சல்லியர்கள்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தும் திரையரங்கு உரிமையாளர்கள் திரையிட மறுப்பது வேதனையளிக்கிறது. இந்நிலை நீடித்தால் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்.

பங்கேற்றவர்கள்:

இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயலாளர் இ. வளையாபதி, மாநகர செயலாளர் வெங்கடேசன், வழக்கறிஞர் பொடா அழகு சுந்தரம், மாநில செயலாளர்கள் பார்த்தீபன், பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments