ஸ்டடி வேல்டு பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!
கோவை மாவட்டம் மதுக்கரை, பாலத்துறையில் உள்ள ஸ்டடி வேல்டு பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஸ்டடி வேல்டு கல்வி குழுமத் தலைவர் டாக்டர். வித்யா வினோத் அறிவுறுத்தலின் படி கல்லூரி நிர்வாக அலுவலர் எம். எம். மனோகரன், தலைமை செயல் அதிகாரி பி. கோமதி , கல்லூரி முதல்வர் கே. கீதா ஆகியோர் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 2026 ல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 2026 நிகழ்வில் சுமார் 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றது.இதில் தகுதி பெறும் மாணவர்களுக்கு வேலை
வாய்ப்புக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது.
📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱99942 55455

No comments
Thank you for your comments