Breaking News

வயலூர் கிராமத்தில் கோலாகலம்: ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ அக்னி வீரனார் ஆலய மகா கும்பாபிஷேகம்!


 வயலூர்  :

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வயலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சப்தகன்னி, ஸ்ரீ அக்னி வீரனார் மற்றும் ஸ்ரீ கருப்புசாமி ஆகிய தெய்வங்களின் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள்:

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்கின. ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி மற்றும் ரக்க்ஷா பந்தனம் உள்ளிட்ட சடங்குகள் செய்யப்பட்டு, கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மகா பூர்ணாஹீதிக்குப் பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்:

இன்று அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. கோபூஜை, விக்னேஷ்வர பூஜை மற்றும் திராவியாஹுதிக்குப் பிறகு யாத்ரா தானம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களைச் சுமந்து கோயிலைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர். கோபுர விமானத்தின் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.


பக்தர்கள் தரிசனம்:

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் வயலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மண்டல பூஜை தொடக்கம்:

இன்று கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை அடுத்து, இன்று முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு சுவாமிகளுக்குச் சிறப்பு மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வயலூர் கிராம பொதுமக்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.


 செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.

 

2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?

| 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 



@K24AstroTv 







No comments

Thank you for your comments