காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்: ஜனவரி 25-ல் முதல்வர் வருகை - பிரம்மாண்ட வரவேற்புக்கு திமுக தயார்!
காஞ்சிபுரம், ஜன. 19:
மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்:
காஞ்சிபுரம் பவளவிழா மாளிகையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட அவைத் தலைவர் இனியரசு தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான க. சுந்தர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முக்கியத் தீர்மானங்கள்:
- முதல்வர் வருகை: வரும் ஜனவரி 25-ஆம் தேதி, ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- பிரம்மாண்ட ஏற்பாடு: இக்கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைத் திரட்டவும், முதல்வருக்கு மாவட்ட எல்லையில் இருந்து பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
- அமைச்சர் துரைமுருகனுக்குப் பாராட்டு: திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசின் 'பேரறிஞர் அண்ணா விருது' பெற்ற திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு பாராட்டுக்களையும், அதனை வழங்கிய முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மைதானம் ஆய்வு:
கூட்டத்திற்குப் பிறகு, பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தை மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு, மேடை அமைப்பிற்கான இடவசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
பங்கேற்பாளர்கள்:
இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ க.எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் படுநெல்லி பி.எம்.பாபு, பி.எம்.குமார், பி.சேகர், ஞானசேகரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments