Breaking News

🔥 "திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி!" - ஈரோட்டில் விஜய் அதிரடி முழக்கம்!


 ஈரோடு, டிசம்பர் 18:

"24 மணி நேரமும் விஜய்யை எப்படி மடக்கலாம், தவெக-வை எப்படி முடக்கலாம் என்றுதான் ஆளுங்கட்சியினர் நினைக்கிறார்கள். திமுக ஒரு தீயசக்தி, தவெக ஒரு தூயசக்தி" என்று ஈரோடு மக்கள் சந்திப்புப் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிகக் காட்டமாகப் பேசினார்.



ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் இதோ:

🚩 ஈரோடு மண்ணுக்குப் பெருமை

"நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் வைத்துதான் தொடங்குவார்கள். அந்த மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் இந்த ஈரோடு. விவசாயிகளுக்குக் கவசமாக விளங்கும் காளிங்கராயன் அணை அமைந்த இந்த மண்ணில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை நம்பித்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்."



அரசியல் எதிரி VS கொள்கை எதிரி

தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபடத் தெரிவித்த விஜய், "பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு கொள்ளையடிக்காதீர்கள். நமது அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக. தவெக ஒரு பொருட்டில்லை என்றால் ஏன் எங்களைப் பார்த்து இவ்வளவு கதறுகிறீர்கள்? உங்களிடம் கொள்ளையடித்த பணம்தான் துணையாக இருக்கிறது; ஆனால் எனக்கு இந்த 'மாஸ்' (தொண்டர்கள்) தான் துணை" என்று முழங்கினார்.

பொய் வாக்குறுதிகள் மீது தாக்குதல்

திமுக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைத்தார்:

  • நீட் ரத்து: "நீட் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள், செய்தார்களா?"

  • கல்வி கடன்: "மாணவர்களின் கல்வி கடன் ரத்து என்னவானது?"

  • சிலிண்டர் மானியம்: "கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவோம் என்று அடித்து விட்டார்கள். இன்றுவரை எதுவும் நடக்கவில்லை."

  • "இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான். வாயிலேயே வடை சுட இது திமுக அல்ல... தவெக!" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.



தீயசக்தி VS தூயசக்தி

திமுக-வை கடுமையாக விமர்சித்த விஜய், "24 மணி நேரமும் என்னையும் எனது கட்சியையும் எப்படி வீழ்த்தலாம் என்றுதான் அவர்கள் சதி செய்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாகப் பேசுவதுதான் அரசியல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிடம் பேசுகிறேன் என்பதைப் பார்க்காதீர்கள், என்ன விஷயம் பேசுகிறேன் என்று பாருங்கள். திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி!" என்று அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.

தொண்டர்களுக்கு நெகிழ்ச்சி

"உங்களுடன் எனக்கு இருப்பது வெறும் உறவல்ல, இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்ற ரத்த உறவு. ஒரு பெற்ற தாய் தரும் தைரியத்தை எனது நண்பர்களும், தோழிகளும் எனக்குத் தருகிறீர்கள். களத்தில் உள்ள எதிரிகளை மட்டும்தான் எதிர்ப்போம், களத்தில் இல்லாதவர்களைப் பற்றிப் பேச எங்களுக்கு நேரமில்லை" என்று தனது உரையை நிறைவு செய்தார்.

No comments

Thank you for your comments