போதைப்பொருள் கலாச்சாரம் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கியது - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
காஞ்சிபுரம், டிச.30:
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஏற்பாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,திருநங்கைகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமை வகித்தார்.
எம்பி க.செல்வம்,எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி,வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 867 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறுகையில்..
வேளாண்மைத்துறை சார்பில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 2.0 திட்டத்தால் எந்த அரசுப்பணியாளர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்.விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி பேசி வருகிறார்.
கடந்த காலங்களில் 10 கிராமங்களுக்கு ஒரு அலுவலர் என இருந்ததை மாற்றி தற்போது ஒவ்வொரு 5 கிராமத்துக்கும் ஒரு அலுவலர் நியமித்து விவசாயிகளின் நிலையை அறிய அரசு முயன்று வருகிறது.போதைப்பொருள் கலாச்சாரம் என்பது அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் தொடங்கியது.அதை அவர்களால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.அதற்கான வழக்கும் நடந்து கொண்டு இருக்கிறது.
அதிமு,பாஜகவிற்கு ஆதரவாக அன்புமணி பேசி வருகிறார்.ஒரு காலத்தில் இட ஒதுக்கீட்டுக்காக போராடியவர்கள் தற்போது அவர்களின் அதிகாரத் தேவைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிராமங்கள் தோறும் விளையாட்டை ஊக்குவித்து இளைஞர்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார் துணை முதல்வர் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments