மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை — 200க்கும் மேற்பட்டோர் கைது
விருத்தாசலம் :
ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல, தமிழ்நாடு அரசும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், உதவித்தொகை உத்தரவு நகல் பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், பதிவு செய்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தாமதமின்றி தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று (11 நவம்பர் 2025) விருத்தாச்சலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.
முக்கிய கோரிக்கைகள்:
- மாதாந்திர உதவித்தொகை உயர்த்துதல்
- உத்தரவு நகல் பெற்றவர்களுக்கு உடனடி வழங்கல்
- பதிவு செய்யப்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தாமதமின்றி தொகை வழங்கல்
📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
No comments
Thank you for your comments