Breaking News

புலிக்கரம்பலூர் பள்ளியில் சத்துணவை குழந்தைகளால் தூக்கிச்செல்லும் அவலம் – பெற்றோர்கள் அதிருப்தி

 


பள்ளி சத்துணவு  – குழந்தைகள் மீது சுமை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புலிக்கரம்பலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி சத்துணவு உணவை குழந்தைகளால் தூக்கிச்செல்ல வைக்கப்படும் அவலம் தொடர்ந்து நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதால், இந்நிலை பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினந்தோறும் நடக்கும் அவல நிலை – சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு

இன்று மதிய உணவு நேரத்தில் சமைத்து வைத்த சத்துணவை, பள்ளி மாணவர்கள் தாங்களே தூக்கிச் செல்லும் காட்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இது தினந்தோறும் நடைபெறும் நடைமுறை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் அதே கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டிருந்த நேரத்தில் கூட இப்படிப்பட்ட நிலை தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

இந்தச் சம்பவத்துக்கு பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய பள்ளி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த அவலத்திற்கான தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கேள்விக்குறிகள் பல… தீர்வு எப்போது?

குழந்தைகளின் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் இவ்வாறு பணிகளைச் செய்ய வைப்பது கடுமையாகப் பதிலளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த பிரச்சனையைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்பதால், மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.

இதற்கு தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)


No comments

Thank you for your comments