ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் இலவச மெகா மருத்துவ முகாம் ...!
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இலவச மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு சிறப்பு விருந்தினராக மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ரிப்பன் வெட்டி முகாமினை துவக்கி வைத்தார்.
பல முன்னணி மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் முன்னெச்சரிக்கை மருத்துவ சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை இணைந்து, முகவர்களுக்கும் முன்னெடுக்க நடைபெற்றது. இதில் பொதுமருத்துவம், எலும்பியல். மகளிர் நலம், கண், பல், உடற்பயிற்சி ஒருங்கிணைந்த முகாமில், தலா ரூ.6,000 மதிப்பிலான சேவைகளை மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை ஆகிய பல்வேறு பரிசோதனைகள் வழங்கினர்.பாலாஜிபாபு பிசினஸ் ஹெட் முகவர்களின் நலனுக்காக இத்தகைய மருத்துவ முகாம்களை நடத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவர் கோயம்புத்தூர் மண்டலம் இந்நிதியாண்டில் ரூ.210+ கோடி புதிய வணிகத்தையும், ரூ.143.50 கோடி மதிப்பிலான 23,800+ கிளைம்ஸ்களை தீர்வு செய்துள்ளதையும் குறிப்பிட்டார்.ஸ்ரீராம் ரகுநந்தனன் சி ஹெஸ் ஆர் ஒ ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்நிறுவனத்தின் முகவர் நலனை முன்னெடுத்தல் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் பிரபு ராஜமாணிக்கம் ஜோனல் ஹெட் ஊழியர்கள், முகவர்கள், மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்கள் மற்றும் டாக்டர் ஹரிதா வாசுதேவன் ஆப்ரேசன் தலைமை, வாசன் ஐ கேர் டாக்டர் ஹசீப் கான் எம்டி, ஏரோ மல்டி ஸ்பெஷாலிட்டிமருத்துவமனை முகுந்த் கிளை மேலளார்கள்பழனிசாமி சரவணன் குணசேகர் டாக்டர் சௌம்யா ஜோனல் கிளைம் ஹெட் மற்றும் கோவை குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments