Breaking News

விருத்தாசலத்தில் தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் – உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 விருத்தாசலம் :

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில், தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் மற்றும் தமிழர் உழவர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்திய அரசு வெளியிட்டுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் மரபணு திருத்தப்பட்ட நெல் விதைகளை தடை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இயற்கை வழி மரபு வேளாண்மையில் விளைவிக்கும் புன்செய் தானியம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஊக்க விலை அளித்து அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.








நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மரபணு மாற்றப்பட்ட நெல் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். பங்கேற்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

📸 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)

No comments

Thank you for your comments