Breaking News

காஞ்சிபுரம் அரசு பள்ளி வகுப்பறையை சீரமைத்த ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் காஸ்மெட்டிக் சிட்டி


காஞ்சிபுரம் மாநகராட்சி வரதராஜர் கோவில் மாடவீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா நிதிநாடும் அரசு நடுநிலை பள்ளியின் சிதலமடைந்த வகுப்பறையை, ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் காஸ்மெட்டிக் சிட்டி சங்கம் சீரமைத்துள்ளது.

சுமார் ₹56,200 மதிப்பீட்டில், பள்ளி வகுப்பறை புதிதாக டைல்ஸ் பொருத்தப்பட்டு, வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இப்பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் பயன்பாட்டிற்கு வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சங்கத்தின் மாவட்ட கவர்னர் சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சீரமைக்கப்பட்ட வகுப்பறையை திறந்து வைத்தார்.

மேலும், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தனர்.








No comments

Thank you for your comments