காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகள் தீர்வு – ரூ. 7.47 கோடி இழப்பீடு வழங்கல்
காஞ்சிபுரம் :
நிகழ்ச்சியின் துவக்கம்
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மாண்புமிகு Pa.உ.செம்மல் அவர்கள் துவக்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் (பொறுப்பு) / கூடுதல் சார்பு நீதிபதி T. திருமால், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் S. மோகனாம்பாள், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி B. சந்தியாதேவி, நீதித்துறை நடுவர் இனிய கருணாகரன் (எண்-1), D. நவின் துரைபாபு (எண்-2) ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், வழக்கறிஞர் சங்க தலைவர்கள் சுப்பிரமணி, திருப்பதி முரளிகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் S. ஜான், C. பத்மநாபன், T. சத்தியமூர்த்தி, D. துரைமுருகன், N. வடிவேல், யுவராணி, சரளா, K. லோகநாதன், கிருபாநிதி, கிருஷ்ணமூர்த்தி, மோகன், ராமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
தீர்வு காணப்பட்ட வழக்குகள்
இந்த மக்கள் நீதிமன்றத்தில்:
என பல்வேறு வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் வட்டத்தில் மொத்தம் 1933 வழக்குகள் எடுக்கப்பட்டு, அதில் 577 வழக்குகள் தீர்க்கப்பட்டன. இவற்றில் ரூ. 7.47 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
வங்கி வழக்குகள் மட்டும் 1346 எடுக்கப்பட்டதில், 55 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ. 62,66,800/- வசூலிக்கப்பட்டது.
சிறப்பு சாதனை
வழக்கறிஞர் C. பத்மநாபன் அவர்கள் ஆஜராகிய 40 வழக்குகள் தீர்க்கப்பட்டு, சுமார் ரூ. 3 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகள்
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை, காஞ்சிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் S. சத்தீஷ்ராஜ் செய்திருந்தார்.
No comments
Thank you for your comments