வன காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி..!
கோவை மருதமலை பகுதியில் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் பிராமின் அசோசியேஷன் மற்றும் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பாக கோயம்புத்தூர் வனச்சரகம் மருதமலையில் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் வன காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குளிர் மற்றும் மழை காலத்தை கருத்தில் கொண்டு நிறுவன தலைவர் முனைவர் எஸ் .ராமநாதன் தலைமையில் ஜெர்க்கின் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து ராமநாதன் கூறுகையில் ஜெர்கின் காலனிகள் மற்றும் டார்ச் லைட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உள்ளோம் முதற்கட்டமாக ஜெர்கின் வழங்கப் பட்டுள்ளது என்றார். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வனப் பகுதியில் போடாமல் ஆங்காங்கே வைத்துள்ள குப்பைத் தொட்டியில் இடுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் பிராமின் அசோசி யேஷன் மற்றும் அகில பாரத மக்கள் கட்சி கோவை மாவட்ட தலைவர் சேகர்,கோவை மாவட்ட துணைத் தலைவர் நாராய ணசாமி,கோவை மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன்,கோவை மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் நாகராஜ் மற்றும் மகேஷ் , மோகன் கோவை வன உயிரின பாதுகாப்பு அறக் கட்டளையின் செயலாளர் ப. சண்முகசுந்தரம் மற்றும் வன பணியாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments