Breaking News

உலக சுற்றலா தினம் விழிப்புணர்வு பேரணி..!

 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தலைமை அதிகாரி சுரேஷ்குமார் சிறப்பு ஏற்பாட்டில் கோவை துடியலூர் பகுதியில் சுற்றுலா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இது குறித்து அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிர்வாகம் சார்பில் கூறியதாவது உலக சுற்றுலா வழியாக தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது, 1970ம் ஆண்டு தொடங்கி, செப்டம்பர் 27ம் நாளை உலக சுற்றுலா தினமாக அங்கீகரித்துள்ளது.மேலும் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், சுற்றுச்சூழல் பொறுப்புகளை மேம்படுத்தவும், பொருளாதார முன்னேற்றத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும் நல்லதொரு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும் சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்‌.மேலும் பேரணிக்கு பாதுகாப்பு அளித்து ஒத்துழைத்த இப்பகுதி போக்குவரத்து காவல்துறையினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.இந்த பேரணியில் அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கவியரசு, கார்த்தி கேசவன், சரத் மேனன்,சுனில், பிரியா , தீபிகா,சுமதி, பூஜிதா மற்றும் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455

No comments

Thank you for your comments