வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் – ஆகஸ்ட் 26 முதல் 30 வரை
வேலூர் :
26.08.2025 அன்று முகாம்கள் நடைபெறும் இடம்
- வேலூர் மாநகராட்சி மண்டலம்–2, வார்டு–35 பகுதிக்கான முகாம், சைதாப்பேட்டை சாலம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
- பள்ளிக்கொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள சமுதாய கூடத்தில், பள்ளிக்கொண்டா பேரூராட்சி வார்டு 1 முதல் 9 வரை உள்ள மக்களுக்கான முகாம் நடைபெறுகிறது.
- காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கரிகிரியில், ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் முகாம் நடைபெறுகிறது.
- அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் இறைவன்காடு, கழனிப்பாக்கம் மற்றும் கந்தனேரி பகுதிகளுக்கான முகாம், கழனிப்பாக்கம் T.M.T மஹாலில் நடைபெற உள்ளது.
- குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் ஏர்த்தாங்கல் பகுதியுக்கான முகாம், நெல்லூர்பேட்டையில் உள்ள வி.பி. மஹாலில் நடைபெறும்.
- பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் சின்னதாமல் செருவில், சாந்தி ஜீவா திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.
- வேலூர் மாநகராட்சி மண்டலம்–4, வார்டு–58 பகுதிக்கான முகாம், அரியூரில் உள்ள காருண்யா மஹாலில் நடைபெறுகிறது
- காங்கேயநல்லூரில் உள்ள திருமுருகர் கிருபானந்த வாரியார் ஆலயத்தில், வேலூர் மாநகராட்சி மண்டலம்–1, வார்டு–14 பகுதிக்கான முகாம் நடைபெறுகிறது.
- அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் இலவம்பாடி பகுதியுக்கான முகாம், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் நடைபெறுகிறது.
- கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ்அரசம்பட்டு மற்றும் பாலம்பாக்கம் பகுதிக்கான முகாம், கீழ்அரசம்பட்டில் உள்ள எம்.ஜி.ஆர் மஹாலில் நடைபெறுகிறது.
- கீ.வ. குப்பம் ஊராட்சி ஒன்றியத்தின் அரும்பாக்கம் மற்றும் தொண்டான்துளசி பகுதிக்கான முகாம், தொண்டான்துளசியில் உள்ள எஸ்.ஆர்.எம். மஹாலில் நடைபெறுகிறது.
- காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் குப்பத்தா மேட்டூர் மற்றும் அம்முண்டி பகுதிக்கான முகாம், குப்பத்தாமேட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெறும்.
- அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் புத்தூர் பகுதியுக்கான முகாம், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறுகிறது.
- கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் முஞ்சூர்பட்டு பகுதியுக்கான முகாம், அரசு உயர்நிலைப்பள்ளி, முஞ்சூர்பட்டில் நடைபெறுகிறது.
- குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் மோடிக்குப்பம், மோர்தானா மற்றும் தனக்கொண்டப்பள்ளி பகுதிகளுக்கான முகாம், கொட்டாமிட்டா அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
மக்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளின் பயனைப் பெறும் வகையில் இம்முகாம்களில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments
Thank you for your comments