Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலையில் 155 வாகனங்கள் பிடிப்பு – ₹22 லட்சம் அபராதம் வசூல்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.


சோதனையில், அதிக பாரம் ஏற்றுதல், தகுதிச்சான்று புதுப்பிக்காதது, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுமதி சீட்டு இல்லாமை, வரி செலுத்தாதது, தார்பாலின் மூடாதது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 155 வாகனங்கள் பிடிப்பட்டு, அபராதம் மற்றும் வரி வசூலிக்கப்பட்டது.

இதன் மூலம் மொத்தமாக ₹22,03,445 அபராதம் ஒரே மாதத்தில் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


Kanchipuram vehicle inspection July 2025 – 155 vehicles seized, ₹22 lakh fine collected

No comments

Thank you for your comments