Breaking News

களியாம்பூண்டி கிராமத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் தரவில்லையென புகார்

காஞ்சிபுரம், ஆக.18:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி கிராமத்தில் விவசாயிகள் 6 பேருக்கு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணம் வழங்கப்படவில்லையென அவ்விவசாயிகள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.




காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையத்தில் அக்கிராமத்தைச் சேர்ந்த முருகன்,மனோகரன், ஜெயபாலன்,ஜானகிராமன்,வடிவேல்,சீனிவாசன் உட்பட மொத்தம் 6 விவசாயிகளுடைய நெல்மூட்டைகள் மொத்தம் 650 கடந்த 28.5.2025 ஆம் தேதி கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகை 3 மாத காலமாக இதுவரை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டால் நெல்லுக்குரிய பணம் வங்கிக்கணக்கில் வந்து விடும் என்று கூறுகிறார்.அனால் பணம் இதுவரை வரவில்லை.

எனவே பாதிக்கப்பட்ட 6 விவசாயிகளுக்கும் நெல்லுக்கு உரிய தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தரமேரூர் வட்டார தலைவர் கே.சீனிவாசன் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

No comments

Thank you for your comments