Breaking News

ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு – முக்கிய அறிவுரை (CBT)

ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்)  தேர்வு நாள் 04.08.2025 முதல் 10.08.2025 வரை மு.ப. & பி.ப.  (Computer Based Test) நடைபெறவுள்ள தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை அறிவிக்கப்பட்டுள்ளது. 




முக்கிய அறிவுரைகள்:

🌞 முற்பகல் தேர்வு:

விண்ணப்பதாரர்கள், முற்பகல் தேர்விற்கு காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

🌇 பிற்பகல் தேர்வு:

விண்ணப்பதாரர்கள், பிற்பகல் தேர்விற்கு மதியம் 1.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். மதியம் 2.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 5.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

📄 அனுமதிச்சீட்டு மற்றும் அடையாள ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை / கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண்(PAN CARD) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகல் கொண்டு வர வேண்டும்.

📵 தடை செய்யப்பட்ட பொருட்கள்

தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம்(Electronic Watches), புளூடூத்(Bluethooth) போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

🚌 பேருந்து வசதி

தேர்வர்கள்  தேர்வு மையங்களுக்கு  செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் தேர்வு நாளன்று  காலை 6  மணி முதல் சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையம்  மற்றும் மாநகர போக்குவரத்து வழித்தடங்களிலும் தேர்வு மையங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📢 முக்கியமாக நினைவில் வைக்க:

  • தாமதமாக வந்தால் தேர்வில் பங்கேற்க அனுமதி இல்லை.

  • அனைத்து ஆவணங்களும், ஹால் டிக்கெட்டும் கட்டாயம்.

📣 வெளியீடு:

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
காஞ்சிபுரம் மாவட்டம்

No comments

Thank you for your comments