ஊர்ப்புற நூலர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டம்...!
கோவை சிவானந்த காலனி பவர் ஹவுஸ் பகுதியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையில் பொது நூலக இயக்கத்தில் பணிபுரியும்
ஊர்ப்புற நூலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகம் நல அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாநில துணைச் செயலாளர் ப. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பின் சார்பில், ஊர்ப்புற நூலகங்களின் தரம் உயர்த்தல் மற்றும் அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 178 நிறைவேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.சுமார் 13 ஆண்டுகளாக ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும் 1006 நபர்கள் சிறப்பு கால முறை ஊதியத்தில் பதவி உயர்வு, குறைந்த ஊதியம், காலமுறை ஊதியம் பெறாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.1915 ஊர்ப்புற நூலகங்களை கிளை நிர்வாக நிலையங்களாக தரம் உயர்த்தவும், வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மற்றும் பரிந்துரைகள் வழங்கியும் எவ்விதத் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிகழ்வில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பு மாநில நிர்வாகிகள் ஸ்ரீதரன் நாகராஜன் கலைச்செல்வன் நீலகிரி ஆனந்தன் கணேசன், ஈரோடு தண்டாயுதபாணி திருப்பூர் கோபால் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் பிரபு யுவராஜ் காந்திமதி உள்ளிட்ட 8 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 200 நூலகர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments