Breaking News

மக்கள் கோரிக்கை : புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சுந்தர்

 காஞ்சிபுரம், ஆக.3:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட இளையனார் வேலூர் ஊராட்சியை சேர்ந்த வள்ளிமேடு கிராமத்தில் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் புதிய நியாயவிலைக் கடையை சனிக்கிழமை திறந்து வைத்து விற்பனையை தொடக்கி வைத்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இளையனார் வேலூர் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட வள்ளிமேடு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க நியாயவிலைக்கடைக்கு செல்ல 3 கி.மீ.தூரம் அலைய வேண்டியது இருப்பதாகவும், வள்ளிமேட்டிலேயே புதிய நியாயவிலைக்கடை திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.45 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கட்டிடம் கட்டப்பட்டிருந்தது.இதனை எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையையும் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு இளையனார் வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் குமணன் ஆகியோர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

வள்ளிமேடு கிராமத்தில் புதிய நியாயவிலைக்கடை திறப்பு,எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார்

No comments

Thank you for your comments