காஞ்சிபுரத்தில் நடப்போம், நலம் பெறுவோம் நிகழ்ச்சி
காஞ்சிபுரம், ஆக.3:
தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையும் மாவட்டநிர்வாகமும் இணைந்து மாதம் தோறும் முதல் ஞாயிறு அன்று நடப்போம்,ந லம் பெறுவோம் என்ற 8 கி.மீ.தூர நடைப்பயிற்சி இயக்கத்தை நடத்தி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய நடைப் பயிற்சியை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையின் செயலாளர் எஸ்.மனோகரன் தொடக்கி வைத்தார்.
நடைப்பயிற்சியின் போது மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி,சுகாதார நிலைக்குழுவின் தலைவர் சங்கர்,எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர்கள் பி.டி.சரவணன், எம்பி பார்த்தசாரதி,இந்திய மருத்துவச் சங்க காஞ்சிபுரம் கிளை செயலாளர் முத்துக்குமரன், நடைப்பயிற்சி மேற்கொள்வோர் சங்க தலைவர் சிவக்குமார் சுந்தரம், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் அ.யுவராஜ் உட்பட 96 பேர் நிகழ்வில் கலந்து கொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
இவை நடைப் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வையொட்டி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments