காஞ்சிபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
காஞ்சிபுரம், ஆக.3:
இந்திய மருத்துவச் சஙகம் காஞ்சிபுரம் கிளை மற்றும் இறைத்துளிகள் இயக்கம் ஆகியன இணைந்து பச்சையப்பன் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டனர்.நிகழ்விற்கு இந்திய மருத்துவச் சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார்.
செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் ஞானவேல்,இறைத்துளிகள் இயக்கம் சார்பில் சேமராஜ், அனாமிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பசுமை இந்தியா இயக்கத்தை சேர்ந்த மேகநாதன் அவர்களிடமிருந்து அசோக மரம், பாதாம்மரம்,நாவல்மரம் ஆகியன உட்பட பல்வேறு மரக்கன்றுகள் பெறப்பட்டு அவை பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய மருத்துவச் சங்க காஞ்சிபுரம் கிளையின் முன்னாள் தலைவர்கள் பூபதி,மனோகரன், சரவணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments