நாளை (17-07-2025) காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்
காஞ்சிபுரம், ஜூலை 16:
தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் குறைகளை நேரில் கேட்டறியும் நோக்கில் தொடங்கியுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், ஜூலை 17, 2025 (வியாழக்கிழமை) அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகாம்கள் நடைபெறும் இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன் படி, ”உங்களுடன் ஸ்டாலின்" என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 155 முகாம்களும் ஆக மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜீலை 15.07.2025 முதல் ஆகஸ்ட் 14.08.2025 வரை நகர்ப்புற பகுதிகளில் 25 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 53 முகாம்களும் ஆக மொத்தம் 78 முகாம்கள் நடைபெறவுள்ளது.
முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ”உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படி, 17.07.2025 அன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா அரங்கம், குன்றத்தூர் ஒன்றியம், மாடம்பாக்கம் லஷ்மி நாராயண மஹால், வாலாஜாபாத் ஒன்றியம், அய்யம்பேட்டை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்றத்தூர் நகராட்சி, அய்யப்பந்தாங்கல் சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாம்களின் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை உரிய ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.
No comments
Thank you for your comments