காஞ்சிபுரத்தில் ரூ.4.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார் வாரியத் தலைவர்
காஞ்சிபுரம், ஜூலை 15:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரியம் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். தூய்மைப்பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் ஹரிஷ்,ராஜன்,காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி கலந்து கொண்டு தற்காலிக தூய்மைப்பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் தங்களது பணி விபரங்களையும்,குறைகளையும் வாரியத் தலைவரிடம் எடுத்துக் கூறினார்கள். அவரும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தாட்கோ மூலம்
என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.4,83,500 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை நல வாரியத் தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வே.நவேந்திரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுவின் தலைவர் சரஸ்வதி மனோகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் வே.ராஜசுதா,மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் எல்.தனலட்சுமி உட்பட அரசு அலுவலர்கள், தற்காலிக தூய்மைப்பணியாள்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments