சமரசத் தீர்வு மைய விழிப்புணர்வு பேரணி- மாவட்ட முதன்மை நீதிபதி தொடக்கி வைத்தார் - Lok Adalat Awareness Rally Flagged Off by District Principal Judge in Kanchipuram
காஞ்சிபுரம், ஜூலை 30:
பொதுவாக நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாக தேங்கி வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலிருந்தும் பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளுக்கு சமரசத்தீர்வு மையம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
சமரசத்தீர்வு மையத்துக்கு வரும் வழக்குகள் 90 நாட்களுக்குள் முடித்து வைக்கப்பட வேண்டும்.சமரசத் தீர்வு மையம் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவதாலும், காலதாமதம் தவிர்க்கப்படுவதாலும் இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்து வதற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ. செம்மல் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணி பேருந்து நிலையத்தில் வந்து நிறைவு பெற்றது. பேரணி செல்லும் வழிகளில் உள்ள வணிகர்கள்,பாதசாரிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் முதன்மை நீதிபதி வழங்கிக் கொண்டே சென்றார்.
பேரணி தொடக்க விழாவில் காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம்,சார் ஆட்சியர் சாதிக்அலி,கூடுதல் மாவட்ட நீதிபதி மோகனகுமாரி, தலைமைக் குற்றவியல் நீதிபதி எஸ்.மோகனாம்பாள், நீதிபதிகள் கே.எஸ்.அருண்சபாபதி, டி.திருமால் உட்பட நீதிபதிகள், வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற பணியாளர்கள், தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Lok Adalat Awareness Rally Flagged Off by District Principal Judge in Kanchipuram

No comments
Thank you for your comments