காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி - எஸ்பி கொடியசைத்து தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஜூலை 5:
இஷின்றியு கராத்தே அமைப்பின் சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சாலைப்பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
பேரணியில் காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கள் சிவசங்கர்,லோகநாதன் (போக்குவரத்துக் காவல்துறை)ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் பேரணியில் பங்கேற்றவர்கள் அனைவரும் எஸ்பி கே.சண்முகம் தலைமையில் போதைப்பொருளை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
வேலம்மாள் போதி வளாகம் மற்றும் அன்னிபெசன்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி உட்பட கராத்தே பயிற்சியாளர்கள்,வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments