12-ம் வகுப்பு தேர்வில் தமிழ்நாட்டில் இரண்டாவது இடம் மற்றும் பொறியியல் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சகஸ்ராவுக்கு காஞ்சிபுரத்தில் வாழ்த்து நிகழ்வு
காஞ்சிபுரம்:
அவரது சாதனையை பாராட்ட நேரில் சென்று வாழ்த்திய போது, காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயரும் 17-வது வட்ட மாமன்ற உறுப்பினருமான குமரவேல், மேலும் பலர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பில் மாணவியின் திறமைக்கு பாராட்டுகள் தெரிவித்தும், எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கையில் மேலும் பல உயரங்களை எட்டட்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. நிகழ்வில் நிறுவன நிர்வாகிகள், பொது மக்கள், அறிஞர்கள் மற்றும் மாணவியர் உறவினர்கள் கலந்துகொண்டு பெருமிதம் தெரிவித்தனர்.
சகஸ்ரா தனது வெற்றியை பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் மற்றும் தன்னை ஊக்குவித்த அனைவருக்கும் அர்ப்பணித்து, “எனது கனவுகள் நாட்டுக்காக, சமூக நலனுக்காக” என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
இத்தகைய மாணவியின் சாதனை, காஞ்சிபுரம் மாவட்ட மாணவர்களுக்கு மாதிரியாகவும், ஊக்கமாகவும் அமைந்துள்ளது.
No comments
Thank you for your comments