Breaking News

1500 ஆண்டு பழைமையான அருள்மிகு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம்

 காஞ்சிபுரம் :


காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள பழைமையான அருள்மிகு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்  திருக்கோவிலில் 1500 ஆண்டு பழமையான திருக்கோவில் ஆகும், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் சிதலமடைந்து புலனமைப்பு பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. 

இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு   பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது. அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு  பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது  வெகு விமரிசையாக நடைபெற்றது. 

அதன் பின் அருள்மிகு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்க்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண  மேலும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுங்க்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர்.

பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.

No comments

Thank you for your comments