காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு ஆளுமைத்திறன் பயிற்சி
காஞ்சிபுரம், மார்ச்.4:
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணிநிலை திறன் மேம்பாட்டு புத்தாக்க பயிற்சி மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சி ஆகியன நடைபெற்றது.பயிற்சியின் தொடக்க விழாவில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
பயிற்சி நிலைய முதல்வர் சீ.மங்கை முன்னிலையுரை நிகழ்த்தினார். இப்பயிற்சியில் மன அழுத்த நிர்வாகம், ஆளுமைத்திறன், மக்கள் தொடர்பு, பணியாளர்களுக்கான தொடர்புகள், குழு மனப்பான்மை உணர்வுகள், பணி மற்றும் குடும்ப சமநிலை உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன.
பயிற்சியில் கூட்டுறவுச் சங்க செயலாளர்கள்,பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments