காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் இடமாற்றம்
காஞ்சிபுரம், பிப்.23:
காஞ்சிபுரத்தில் பெருமாள் கோயில்கள் அதிகம் இருக்கும் பகுதி விஷ்ணுகாஞ்சி என்றும் சிவலாயங்கள் அதிகம் இருக்கும் பகுதி சிவகாஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் காவல் நிலையங்கள் உள்ளன.
இதில் விஷ்ணுகாஞ்சிகாவல் நிலையம் கடந்த 1930 ஆம் ஆண்டு ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பழமை வாயந்த கட்டிடக்கலை அம்சத்துடன் 95 ஆண்டுகளாக கம்பீரமாக இருந்து வந்த இக்காவல் நிலையத்தை நவீன வசதிகளுடன் கட்ட தமிழக அரசு ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் காரணமாக பழமையான இக்கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு புதியதாக கட்டப்படவுள்ளது. இதனையொட்டி விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள பழைய காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய கட்டிடத்தில் செயல்படத் தொடங்கி இருக்கிறது.
No comments
Thank you for your comments