Breaking News

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: மிட்னமல்லி கிராமத்தில் விவாதம்!






திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், 3-ஆம் வார்டு மிட்னமல்லி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான வண்டி பாட்டை (சர்வே நம்பர்கள்: 145/1, 146, 148, 117, 116) உள்ளிட்ட சுமார் 10 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்பு முயற்சி நிகழ்ந்துள்ளது. 

இந்த நிலத்தில் தனியார் லேஅவுட் உருவாக்கி, இடம் விற்பனை செய்யும் நோக்கத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தனிச்சாலை அமைக்கும் பணியில் இறங்கினர்.  

கிராம மக்கள் தடுத்தனர்: 

இந்த நடவடிக்கையை கவனித்த கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, பணிகளை நிறுத்தச் செய்தனர். பின்னர், அவர்கள் தகவலை சமுக ஆர்வலர்கள், காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.  தகவல் அறிந்ததும், ஆக்கிரமிப்பாளர்கள் அங்கு இருந்து தப்பி சென்றனர்.

முன்னதாக அதிகாரிகளுக்கு புகார்: 

இது தொடர்பாக, சமுக ஆர்வலர்கள் ஏற்கனவே பல முறை ஆவடி வட்டாட்சியர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், நகராட்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் மனு அளித்ததாக தெரிவிக்கின்றனர். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.

குற்றச்சாட்டு: 

சமூக ஆர்வலர்கள் மேலும் தெரிவித்ததாவது, "இந்த நிலங்களை குறிவைத்து, சில சமூகவிரோதிகள், அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து அரசின் நற்பெயரை கெடுக்கும் விதமாக கொள்கைமீறி செயல்படுகின்றனர்"  என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா? 

சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்த முயற்சியினால், இந்த நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களும் அரசு அதிகாரிகளின் பதில்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

No comments

Thank you for your comments