சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ டைட்டில் டீசர் வீடியோ -
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன்(ஜெயம் ரவி), அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.
இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படமாகும்.
அதுமட்டுமன்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே இந்தப் படத்தின் தலைப்பு ‘பராசக்தி’ என்ற தகவல் வெளியாகிவிட்டது.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி டைட்டில் டீசர் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியது. ஆனால், படத்தின் தலைப்பு வெளியாகிவிட்டதால் இப்போதே டைட்டில் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
டைட்டில் டீசர் எப்படி?
‘பராசக்தி’ டைட்டில் டீசரைப் பொறுத்தவரை, இது ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமா என்பது உறுதியாகத் தெரிகிறது. மாணவர் புரட்சியே களம் என்பதையும் டைட்டில் டீசர் பறைசாற்றுகிறது. குறிப்பாக அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலாவின் அறிமுகம் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது.
புரட்சிக்குத் தயாராகும் மாணவர் படைக்குத் தலைமை தாங்கும் நாயகனாக உக்கிரமாகவும் உத்வேகமாகவும் தோற்றமளிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘சேனை ஒன்று தேவை... பெரும் சேனை ஒன்று தேவை’ என கல்லூரி மாணவர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் முழங்குகிறார். இப்படத்தில் ரவி மோகனுக்கு வில்லன் கதாபாத்திரம் என்பதை டைட்டில் டீசர் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
‘அச்சம் என்பது மடமையாடா...’ பாடலின் பின்னணியில், பீரியட் டிராமவுகான நேர்த்தியுடன் கலை வடிவமைப்பும் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, பின்னணி இசை கச்சிதமாக அழுத்தத்தைக் கூட்டுகிறது.
இதோ உங்களுக்குகான டைட்டில் டீசர் வீடியோ :
#பராசக்தி #Parasakthi
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 29, 2025
Tamil title teaser - https://t.co/ne1Vbz7gl3#SK25 pic.twitter.com/OGXc2n5D1z
No comments
Thank you for your comments