Breaking News

பொறுப்பேற்ற உடன் களத்தில் இறங்கிய ஆவடி வட்டாட்சியர்

 ஆவடி:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியராக இருந்த சசிகலா வெள்ளிக்கிழமை அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து,  வெள்ளிக்கிழமை மாலை   5:30 மணிக்கு  புதிய வட்டாட்சியராக உதயம் பொறுப்பேற்றார்.



தொடர்ந்து, சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடைபெற்றது. 



ஆய்வின் போது, அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்களுடன் நேரடியாக உரையாடிய அவர், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடியாக தீர்வு காணும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அதிகாரங்களில் இடம்பெரும் புதிய மாற்றங்களின் அடையாளமாக, மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு செயல்பட தொடங்கிய  நடவடிக்கைகள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த செயல்பாடு, புதிய வட்டாட்சியராகப் பொறுப்பேற்ற  உதயம், மக்களுக்கு மையமாக செயல்படும் நிர்வாகத்திற்கான உறுதியான ஆரம்பமாகப் பார்க்கப்படுகிறது.




No comments

Thank you for your comments