ஆவடி அருகே அண்ணன், தம்பி பட்டா கத்தியால் வெட்டிக் படுகொலை - கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை ஆணையர் கி.சங்கர் அதிரடி
ஆவடி :
ஆவடியை அடுத்த பட்டாபிராம், ஆயில்சேரி கிராமம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன்கள் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27), இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவரது தம்பி ஸ்டாலின் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் ரவுடியாக வலம் வந்தனர். இவர்கள் இருவர் மீதும் பட்டாபிராம், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை பஜனைக்கோவில் தெரு அருகே நடந்து சென்ற ஸ்டாலினை மர்மக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் , பட்டா கத்தியுடன் வெட்டி சாய்த்தது.இதில் அவர் அதே இடத்தில் இரத்தம் வெள்ளத்தில் பலியானார்.
தம்பியை வெட்டுவதை பார்த்த அண்ணன் இரட்டை மலை சீனிவாசன் தடுத்த போது, அவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் உயிருக்கு பயந்து ஓடிய இரட்டை மலை சீனிவாசனை துரத்திச் சென்று பட்டா கத்தியால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுபற்றி தகவலறிந்த பட்டாபிராம் மற்றும் ஆவடி போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 கொலைகளும் வெவ்வேறு காவல் எல்லையில் கொலை செய்யப்பட்டதால் பட்டாபிராம், ஆவடி போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரட்டை கொலை எதற்காக நடந்தது. ரவுடி போட்டியால் நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 தனிப்படை
இந்த இரட்டை கொலைப் பற்றி கொலையாளிகளை பிடிக்க ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், இந்த கொலை சம்பவத்தை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர். 3 கொலையாளிகள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொலை சம்பவத்தை அறங்கேற்றியதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சி மூலம் பதிவாகி உள்ளது. இதனால் கொலையாளிகள் யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டு பிடித்து உள்ளனர். இந்த கொலை குறித்து மேலும் பல்வேறு தகவல்களை சேகரிக்க ஆயில்சேரி கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.என்றாலும் கொலையாளிகளை நெருங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதியில் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த இரட்டை கொலை சம்பவம் காரணமாக ஆயில்சேரி மற்றும் சோராஞ்சேரி அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பணி இடைநீக்கம்
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பட்டாபிராம் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணி இடைநீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எச்சரிக்கை
பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசாருக்கு காவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Post Comment
No comments
Thank you for your comments