Breaking News

சமத்துவ பொங்கல் உட்பட திமுக செயற்குழு கூட்டத்தில் 3 தீர்மானம் நிறைவேற்றம்

இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி சமத்துவ பொங்கல் கொண்டாட வரும் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் பவள விழா மாளிகையில் மாவட்ட கழக அவைத் தலைவர் ச.இனியரசு  தலைமையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர் டி.வி.கோகுல கிருஷ்ணன், கே.செல்வம் எம்.பி, கு.மலர்விழி, மாவட்ட பொருளாளர் சென்ட்ரல் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள்,  மாநகர நகர , ஒன்றிய பகுதி , பேரூர் செயலாளர்கள் , கழக அணிகளின் மாநில,  மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1. தை ஒன்று தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை  தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது அறிவித்ததின்படி,  திராவிடம் மாடல் நல்லாட்சியில் சமத்துவ பொங்கல் விழாவை மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகங்கள் தோறும் ஏழை எளிய மக்கள் உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது..

2. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான இடைக்கழி நாடு பகுதியில் 2025 சமத்துவ பொங்கல் திருவிழாவை கொண்டாடுகின்ற வகையில் அதில் பங்கேற்பதற்காக வருகை புரியும் கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வருகவேற்கும் விதமாக அனைவரும் ஒன்று கூடுதலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

3. திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு தற்போது இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடி வரும் நிலையில் அதற்கு தற்போது பேரறிவு சிலை என தமிழக முதல்வர் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த  செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு நாட்காட்டிகள் வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments