பட்டாபிராம் மேம்பாலம் குளறுபடியால் பேருந்து சேவை பாதிப்பு – பொதுமக்கள் அவதி
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டைட்டில் பார்க் எதிரே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் குளறுபடி காரணமாக, பூந்தமல்லியில் இருந்து சித்துக்காடு, அணைக்கட்டுச்சேரி தண்டுரை வழியாக, பட்டாபிராம் பேருந்து நிலையத்துக்கு செல்ல வழி இல்லாமல், செல்லும் வழியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்கது, 54 சி பேருந்து, கடந்த காலங்களில் விடியற்காலை 5:45 மணிக்கு புறப்பட்டு வந்த நிலையில், தற்போது 7 மணிக்கு மட்டுமே புறப்படுவதால், காலையில் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஓட்டுநர்கள் கூறுவதின்படி, மேம்பாலத்தால் பாதை தடைப்பட்டுள்ளதால், முதல் பேருந்தை மீண்டும் 5:45 மணிக்கு இயக்குவது சிரமமாக உள்ளது.
பொதுமக்கள் மற்றும் பயணிகள், 54 சி பேருந்தை பழைய நேரத்திற்கு திரும்பச் செய்ய வேண்டுகோள் விடுத்து பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்களிடம் புகார் அளித்துள்ளனர். அவரும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
பொதுமக்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றி, தங்கள் தினசரி வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிரமத்தைத் தடுக்க அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments
Thank you for your comments