Breaking News

காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஊழியர் சாவு

காஞ்சிபுரம், டிச.1:

காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கேபிள் டி.வி.ஊழியர் ஞாயிற்றுக்கிழமை இறந்தது தொடர்பாக தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



காஞ்சிபுரம் ஓரிக்கை காக்கைபாடினியார் தெருவில் வசித்து வந்தவர் முருகன்(49)இவர் மிலிட்டரி சாலையில் உள்ள தியாகி விஸ்வநாதன் நகர் பகுதியில் கேபிள் டிவி பழுது பார்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மின்சார வயரை மாற்ற திட்டமிட்ட போது உயர் மின்அழுத்த கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக முருகனின் மனைவி சந்தானலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த முருகனுக்கு இரு பெண்குழந்தைகளும் உள்ளனர்.

No comments

Thank you for your comments