காஞ்சிபுரத்தில் அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், டிச.19:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அம்பேத்கரை இழிவு படுத்திய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் மதிஆதவன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தி.வ.எழிலரசன்,மாவட்ட நிர்வாகி பாசறை,செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரும் கண்டனக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அமித்ஷாவின் உருவபொம்மையையும் எரிக்க முற்பட்டதுடன் சாலைமறியலும் செய்ய முயன்றனர்.உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தினர்.
No comments
Thank you for your comments