முதல்வன் திரைப்படம் பாணியில் உடனடி அறிவிப்பு - பொற்கொல்லர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கோவை :
கோவை மாவட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநாகராட்சி வார்டு எண் 80-க்கு உட்பட்ட கெம்பட்டிகாலனி பகுதியில் தங்க நகை பட்டறைகளுக்கு நேரில் சென்று தங்க நகை தொழில் புரியும் பொற்கொல்லர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அவரிடம் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் கூட்டுறவு சொசைட்டி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொற்கொல்லர்கள் முன்வைத்தனர்
இந்நிலையில் நடைபெற்ற கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார் அதனைத் தொடர்ந்து பொற்கொல்லர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டமானது அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் எம்.பி.பாண்டியன் கூறியதாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தங்க நகை பூங்கா கோவையில் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக உளளது.
இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விஸ்வகர்மா தங்க நகை தொழில் புரியும் சமூகத்திற்கும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. மேலும் முதல்வன் திரைப்படத்தில் வருவதைப் போலவே உடனடியாக தங்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி காண்பித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கூட்டுறவு சொசைட்டி அமைத்து தர வேண்டும், பொற்கொல்லர் நல வாரியம் என்பதை ஐந்தொழில் நலவாரியம் என்று மாற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பழக்கடை முத்து முருகன் மற்றும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments
Thank you for your comments