“நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் திருநங்கையர்கள் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கல்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநங்கைகள் / திருநம்பிகள் அவர்கள் வாழ்வாதாரத்தில் முன்னேறுவதற்காக ஆய்வுக் கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட திருநங்கை/திருநம்பிகள் கலந்துக் கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, மாநில அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், திருநங்கை/திருநம்பிகளுக்கான உயர்கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு, 10 திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
புதிய மின்னணு குடும்ப அட்டையினை பெற்ற திருநங்கை/திருநம்பிகள் நிறைந்த மனதுடன் தங்களது நன்றிகளை தெரிவிக்கையில்:
எங்களுக்கு அத்தியாவசிய அடையாள அட்டைகள் மற்றும் எந்தவித ஆவணங்களும் இன்றி அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. எங்களின் நலனைக் காப்பதற்கும், தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் திருநங்கையர் நலவாரியம் அமைக்கப்பட்டு திருநங்கையர்களை பொருளாதார ரீதியாக மேம்பட, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, குடியிருப்பு வீடுகள், இலவச தையல் இயந்திரம், உயர்கல்வி பயில உதவி, சுய உதவி குழுக்கள், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, இலவச திறன் பயிற்சி, வருமானத்தை ஈட்டும் தொழில் செய்திட மானியம், திருநங்கையர்களுக்கான விருதுகள், திருநங்கையர்களுக்கு ஓய்வூதியம் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கி வருகிறது. திருநங்கைகள் / திருநம்பிகள் அவர்கள் வாழ்வாதாரத்தில் முன்னேறுவதற்காக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
எங்களின் வாழ்வில் அக்கறை கொண்டு, எங்களையும் சமூகத்தில் ஒரு அங்கமாக உணர வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் அனைவரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments
Thank you for your comments