காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், நவ.22:
ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத்துறையுடன் இணைக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்,ஓய்வூதிய இயக்குநரகத்தை தொடர்ந்து தனித்துறையாகவே செயல்படுத்த வேண்டும்,ஓய்வூதியர்கள் நலனுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டக் கருவூல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வி.ரவிக்குமார் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் வட்டாரக் கிளை தலைவர் ஜி.ஏழுமலை,வாலாஜாபாத் வட்டாரக் கிளைத் தலைவர் டி.வின்சென்ட்ராஜ், உத்தரமேரூர் வட்டார கிளை தலைவர் ஆர்.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் மு.பிச்சைலிங்கம் வரவேற்று பேசினார்.காப்பாளர் நலச்சங்க முன்னாள் தலைவர் இ.ராஜேந்திரன்,சங்கத்தின் மாநில பொருளாளர் இ.திருவேங்கடம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

No comments
Thank you for your comments