கூட்டுறவு பல்பொருள் அங்காடி மற்றும் மருந்தகம் திறப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், இன்று (07.11.2024) கூட்டுறவு பல்பொருள் அங்காடி மற்றும் மருந்தகத்தினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, நான்கு நபர்களுக்கு கருணை அடிப்படையில் விற்பனையாளர் பணிக்கான ஆணை மற்றும் 194 உறுப்பினர்களுக்கு ரூ.1.92 கோடி கடனுதவிகளை வழங்கினார்கள்.
தமிழக அரசின் சட்டமன்ற பேரவை அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு பல்பொருள் அங்காடி மற்றும் காய்கறி அங்காடியை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் திறந்து வைத்து, வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சிறிய சரக்குந்தினை பொது பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.
மேலும் நான்கு நபர்களுக்கு கருணை அடிப்படையில் விற்பனையாளர் பணிக்கான ஆணை வழங்கி, மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் இதுவரை இணைக்கப்படாத கிராமங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து சதாவரம் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நியாயவிலைக் கடையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, ஆற்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடக்க கூட்டுறவு சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றுதல் என்ற நிகழ்வில் “நிம்பம்” என்ற பெயரில் வேப்பம் புண்ணாக்கு விற்பனையை துவக்கி வைத்து, மாகரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை பார்வையிட்டு, மாகரல் கூட்டுறவு சங்கத்தில் கணினி மயமாக்கல் பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுவணிக்கடன், மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் கடன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் என மொத்தம் 194 உறுப்பினர்களுக்கு ரூ.1.92 கோடி கடனுதவிகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் திருமதி.க.சிவமலர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டாக சாலை இணை பதிவாளர் திரு. ஆ. முருகானந்தம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments