கோவை மக்களுக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா!
கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த CSC-யில் இருந்து மொபைல் வேன் (நடமாடும் பொது சேவை மையம்) அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் கொடுத்துள்ளார்கள் இதில் கோவை மாவட்டத்திற்கு பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கிராமத்தில் உள்ள விஜயலட்சுமி VLE அவர்களுக்கு மொபைல் வேனை கொடுத்துள்ளார்கள். இவ்விழாவில் CSC-யின் மாவட்ட மேலாளர் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்டத்தில் உள்ள CSC VLE மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தார்கள்.இந்த வேனில் மத்திய மாநில அரசின் திட்டங்களையும் சேவைகளையும் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும் இதன் மூலம் அனைத்து மக்களும் எளிமையாக மத்திய அரசின் திட்டங்களை பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது இந்த வாய்ப்பை அளித்த CSC- மத்திய மாநில தலைமை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

No comments
Thank you for your comments