4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ஆர்பாட்டம்
காஞ்சிபுரம்
தமிழகம் முழுவதும் அனைத்தும் மாவட்டங்களிலும் உள்ள தாலுகா அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாவட்டங்கள் தோறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் டி கிரேட் நான்காம் நிலைக்கு இணையான ஊதியம் வழங்கிடவும்,அரசாணை 33 இன் படி கருணை அடிப்படையில் பணியினை உடனடியாக வழங்கிடவும், CPS பணி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் பிடித்ததை திரும்ப பெறுவதற்கு அரசாணை வெளியிடவும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட என நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டமும்,13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலும் ஆர்பாட்டம் நடத்திட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் வட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
.jpg)

No comments
Thank you for your comments