துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் மினி லாரி கவிழ்ந்து விபத்து - 28 பேர் படுகாயம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்ஓட்டிவாக்கம்,கூத்திரம் மேடு பகுதியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை பகுதியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மினி லாரி தாமல் அருகே டயர் வெடித்து கவிழ்ந்ததில் 28 பேர் படுகாயம்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
தகவல் அறிந்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் எம்பி க. செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக காஞ்சிபுரம் மருத்துவமனையில் பரபரப்பு நிலவி வருகிறது.
பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments