காவல்துறை சார்பில் பட்டாசு விற்பனை
காஞ்சிபுரம், அக்.30:
காஞ்சிபுரம் காவலர் பயிற்சிப் பள்ளி முன்பாக ஆயுதப்படைப்பிரிவு காவல்துறை சார்பில் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மொத்த விலைக்கே பட்டாசுகள் விற்றதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர்.
சிவகாசியில் தயாரான பட்டாசுகள் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையில் ஆயுதப்படைப்பிரிவின் சார்பில் காவலர் பயிற்சிப் பள்ளி முன்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.ரூ.100 முதல் ரூ.3500 வரை பட்டாசுப் பெட்டிகள் வைக்கப்பட்டு அவை ஒவ்வொன்றிலும் எத்தனை ரகங்கள் உள்ளன என்ற விபரங்களுடன் எழுதி பட்டாசு விற்பனை நடந்தது.
ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவலர்கள் பலரும் மிகக்குறைந்த விலைக்கு கிடைப்பதாக கூறி மிகுந்த ஆர்வத்துடன் குடும்பம்,குடும்பமாக கூட்டமாக வந்து பட்டாசுகளை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
No comments
Thank you for your comments