காஞ்சிபுரத்தில் வனவிலங்கு வார விழா
காஞ்சிபுரம், அக்.8:
காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறையும்,பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து பச்சையப்பன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் வனவிலங்கு வார விழாவை நடத்தினார்கள்.
விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.வெற்றிச்செல்வி பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவிற்கு வனச்சரக அலுவலர் கோபக்குமார் தலைமை வகித்தார்.வனக் காப்பாளர் பரணீதரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் 100க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் வனவிலங்குகளை பாதுகாப்பது மற்ரும் அவற்றை அழிவிலிருந்து மீட்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
No comments
Thank you for your comments