Breaking News

மழைநீர் வடிநீர் கால்வாய்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மழைநீர் வடிநீர் கால்வாய்களை இன்று (16.10.2024) மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று குன்றத்தூர் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி ராமமூர்த்தி அவென்யூவிலுள்ள மழைநீர் வடிநீர் கால்வாய்களை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மௌலிவாக்கம் ஊராட்சி திருவள்ளுவர் நகரிலுள்ள மழைநீர் வடிநீர் கால்வாய்களையும் மற்றும்  பரணிபுத்தூர் ஊராட்சி, ஜோதி நகரில் மழைநீர் வடிநீர் கால்வாய்களையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 


No comments

Thank you for your comments