மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் மற்றும் பாலம் கட்டும் பணியினையும் ஆட்சியர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் மற்றும் பாலம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருகாலிமேடு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, திருப்பருத்திகுன்றம் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் மற்றும் முருகன் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இவ் ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு. வே.நவேந்திரன், மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments